பாடசாலை கீதம்
அல்லாஹ்வை புகழுகின்றோம்
எங்கள் அறிவைத் தேடுகின்றோம்
அறியாமை தன்னைப் போக்கும்
அறிவை எமக்கருள்வாய்
குணத்தோடு உலகில் வாழ
குறையாத அறிவைத் தருவாய்
அல்லாஹ் யா அல்லாஹ் (III)
பாபுல் ஹசன் தானெங்கள்
பயில் கல்வி கூடமாகும்
பாரில் சிறந்து ஓங்க
படைத்தோனை அருள் புரிவாய்
அறியாமை தன்னைப் போக்கும்
அறிவை எமக்கருள்வாய்
குணத்தோடு உலகில் வாழ
குறையாத அறிவைத் தருவாய்
அல்லாஹ் யா அல்லாஹ் (III)
பேராற்றல் மிக்க ஆசான்
பேரன்பு மிக்க பெற்றோர்
அல்லல் அகன்று வாழ
அல்லாஹ் அருள் புரிவாய்
அறியாமை தன்னைப் போக்கும்
அறிவை எமக்கருள்வாய்
குணத்தோடு உலகில் வாழ
குறையாத அறிவைத் தருவாய்
அல்லாஹ் யா அல்லாஹ் (III)





